Monday, July 12, 2010

உனக்காகவே

உனக்காகவே உறங்காமல்
காத்திருக்கிறேன்
ஒவ்வொரு நாளும்
உன் மடிமீது தலை சாயும்
நாளை நோக்கி

Saturday, March 20, 2010

வாக்காளர்கள்

மழைக்கால குடைகள்
மழை நின்றால் மீண்டும்
மாட்டி வைப்பார் மூலையில்

சாதனை

வானத்தில் ராக்கெட்
வட்டமிடும் இன்சாட் - இங்கு
வயல்வெளிகளில் பவர்கட்...

அவசர உலகம்

சிதைந்த உடல் தண்டவாளத்தில்
சலித்த மனங்கள் கணக்கு போட்டது
கால தாமத்தை...

பால் குடித்த பிள்ளையாரை

பால் குடித்த பிள்ளையாரை
பரிதாபத்துடன் பார்க்கும்
பசித்த ஏழை சிறுமி..

தூண்டில் மீன்

தூண்டில் மீன்
சபதம் கொண்டது
இனி வாயே திறக்கக்கூடாது

பொய் சொல்லக் கூடாது பாப்பா

பொய் சொல்லக் கூடாது பாப்பா
சிரித்துக் கொண்டார்
வக்கீல் தந்தை..

Sunday, March 7, 2010

அடி பட்டதை கூறாது

கவலை படாதே
உன் பதில் வரும் வரை
நான் உன்னை காதலிப்பதாக
யாருக்கும் சொல்ல மாட்டேன்
என் இதயம்
அடித்து கூறும்
அடி பட்டதை கூறாது..

Friday, March 5, 2010

என் முதல் கவிதை

உன்
பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல வரிகள்
தேடித்தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கியது
உனக்கான
என் கவிதை

உன் பிரிவு

உயிர் பிரிவதை
நேரில் கண்டேன்
உன் பிரிவில்

உன் பிரிவை

உன் பிரிவை கூட
என்னால்
தாங்கி இருக்க முடியும்
அழாமல் நீ
பிரிந்து இருந்தால்

கவிதை

கவிதை வேண்டுமென
பேனா தூக்கினேன்
கைகள் தானாய் கிறுக்குதடி
உன் பெயரை..

பூ

உன்னை சுற்றி
வட்டமடித்து கொண்டிருக்கும்
வண்ணத்து பூச்சிக்கு
எப்படி
புரிய வைக்க போகிறேன்
நீ
பூ இல்லை என்று..

Thursday, March 4, 2010

நிழற்படம்

ஒரு முறைதான்
பார்த்துவிட்டு
போனாய்
என் வீட்டு ஆளுயரக்
கண்ணாடி
உன்
நிழற்படமாகிவிட்டது

காதல்

உனக்கும் எனக்கும்
பிடித்த பாடல்
தேனீர் கடையில்
பாடிக் கொண்டிருக்கிறது
கடைசி பேருந்தையும்
விட்டு விட்டு
கேட்டுக்
கொண்டிருக்கிறது

வைரம்

பல நூற்றாண்டுகள் ஆகுமாமே
ஒரு வைரம் உருவாக
நீ மட்டும் எப்படி
பத்தே மா தத்தில் உருவானாய் !

வெட்கம்

மூவர் அமரும்
இருக்கையில்
உனக்கும் எனக்குமிடையே
சம்மணமிட்டமர்ந்த
உன் வெட்கத்திற்கு
எத்தனை டிக்கெட்
எடுப்பது....

Tuesday, March 2, 2010

உடைந்தேன்

என்னை
உடைப்பதற்காவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ...

Monday, March 1, 2010

சிலை

எல்லா சிலைகளும்
சிலையாய் நிற்க
ஒரு சிலை மட்டும்
நகர்வது போல் இருக்கிறது
கோவில் பிரகாரத்தை
நீ
சுற்றி வரும்போது...

கொலுசு

கொலுசு
உன் கால்களோடு
போய்விட்டது
சப்தம் மட்டும்
என் காதுகளோடே
வருகிறது..

Sunday, February 28, 2010

மௌனம்

உன்னுடன்
பேசுவதற்காகவே
எல்லோருடனும்
பேசாமலும் இருக்கிறேன்..

நிற மாற்ற விதி

ரோஸ் ஐஸ் சாப்பிட்டு
வாய் சிவக்க நிற்பாய்
'நிற மாற்ற விதி'
என்பது
இயற்பியல் அல்ல
இதழியல் !!!

நட்சத்திரங்கள்

ஆப்பிள் கன்னத்தில்
அங்கங்கே பருக்கள்
நிலவில் நட்சத்திரங்கள்..

ஏக்கம்

உன்னை காணமல்
வெறிச்சோடியது
உன் இருக்கை மட்டுமல்ல
என் இதயமும் கூட..